ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்: சொகுசு கப்பல் கொண்டாட்டங்களின் முழு விவரம்
இத்தாலியிலிருந்து சுவிட்சர்லாந்து வரையிலான பிரமாண்ட கப்பல் பயணம் மூலம் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் இரண்டாவது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன.
"வாழ்க்கை என்பது ஒரு பயணம்" என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகளவில் பிரபலமானவர்கள் இந்த ஜோடியுடன் ஒரு வார கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
அவர்களின் சுவாரஸ்யமான பயணத் திட்டத்தின் ஒரு பார்வை இதோ
மே 29ம் தேதி: கப்பலில் "வரவேற்பு உணவு" உடன் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன, அதைத் தொடர்ந்து மேற்கத்தேய முறைப்பாட்டு உடைகளை அணிந்திருக்கும் "நட்சத்திர இரவு" கண்கவர் விருந்து நடைபெறும்.
மே 30ம் தேதி: "ரோமன் ஹாலிடே" கருப்பொருள் கொண்ட ரோமில் ஒரு நாள் சுற்றுலா பயணம் "சுற்றுலா பயண ஷிக்”("Tourist Chic") உடையில் நடைபெறும். "ரெட்ரோ உடை அணிவது" கட்டாயமாக்கப்பட்ட "லா டோல்ஸ் ஃபார்”("La Dolce Far Niente") என்ற கருப்பொருள் கொண்ட நிகழ்வுக்கு கப்பலுக்கு திரும்புவார்கள், இது "டோகா பார்ட்டியுடன்" நிறைவுபெறும்.
மே 31ம் தேதி: "வி இன் ஒன் அண்டர் தி சன்" என்ற கருப்பொருள் கொண்ட பிறந்தநாள் கொண்டாட்டம் கப்பலில் "மகிழ்ச்சியான உடை அணிவது" கடைப்பிடிக்கப்படும். மாலையில், கேன்ஸில் "லெ மாஸ்க்வெரேட்”(Le Masquerade") ball in Cannes, அங்கு "மாஸ்க் அணிந்த கறுப்பு டை" அணிவது கட்டாயம். கப்பலில் "பார்டன் மை ஃப்ரெஞ்ச்" என்ற ஆப்டர் பார்ட்டியுடன் இரவு நிறைவுபெறும்.
ஜூன் 1ம் தேதி: "லா டோல்ஸ் விடா” ("La Dolce Vita")(நல்ல வாழ்க்கை) என்ற கருப்பொருள் கொண்ட போர்டோஃபினோவில் கொண்டாட்டங்கள் நிறைவுபெறும், அங்கு "இத்தாலிய கோடை பாணி" உடையை அனைவரும் அணிந்து கொள்ளலாம்.
ஜோடியின் தனிப்பட்ட தன்மையை உறுதி செய்வதற்காக, கப்பல் முழுவதும் கண்டிப்பான போன் பயன்பாட்டு தடை கடைப்படுத்தப்படும்.
இந்த கொண்டாட்டம், இந்தியாவின் ஜாம்நகரில் மார்ச் மாதம் நடைபெற்ற அவர்களின் மூன்று நாள் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களைத் தொடர்ந்து வருகிறது. இந்த ஜோடி ஜூலை 12 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |