ஐரோப்பாவின் விதியைத் தீர்மானிக்கும் இறுதி கட்டம்: எச்சரிக்கும் ஜெலென்ஸ்கி
ரஷ்யா உடனான இந்த சமாதான ஒப்பந்தத்தின் இறுதிப் பகுதியானது உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் விதியைத் தீர்மானிக்கும் என்றும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ஜெலென்ஸ்கி திட்டவட்டம்
அமைதி ஒப்பந்தத்தின் 10 சதவீதம் மட்டுமே இனி எஞ்சியுள்ளது என குறிப்பிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, எந்தக் காரணம் கொண்டும் ஒரு பலவீனமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டேன் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

கிழக்கு உக்ரைனில் குறிப்பிட்ட பிரதேசங்களை ரஷ்யாவிடம் விட்டுக்கொடுப்பது குறித்த ஜெலென்ஸ்கியின் தயக்கங்கள் நீடிக்கும் நிலையில், இது விளாடிமிர் புடினுக்கு மேலும் தைரியமூட்டும் என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவரவே உக்ரைன் விரும்புவதாகவும், உக்ரைனை முடிவுக்கு கொண்டுவர்ருவதற்கு அல்ல என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவால் போரை முடிவுக்கு கொண்டுவர முடியும், ஆனால் ரஷ்யா தயாராக இல்லை. ரஷ்யாவை உலக நாடுகள் கட்டாயப்படுத்த முடியும், அப்படியான நெருக்கடி மட்டுமே இந்த விவகாரத்தில் பலனைத் தரும் என்றார்.

போருக்கு இழுத்துவிடும்
பலவீனமான ஒப்பந்தம் இன்னொரு போருக்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் இந்த போரை உலக நாடுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அல்லது உலக நாடுகளை ரஷ்யா போருக்கு இழுத்துவிடும் என்றார்.

ஐரோப்பிய அமெரிக்க அதிகாரிகளுடன் உக்ரைன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, புடினின் கருங்கடல் மாளிகையை உக்ரைன் தாக்கியதாக ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுகளை மேற்கத்திய நாடுகளின் உளவு அமைப்புகள் புறந்தள்ளியுள்ளது.

உக்ரைன் தம்மை கொலை செய்ய முயன்றதாக புடின் ட்ரம்பிடம் முறையிட்டது உண்மையில் நடக்கவில்லை என்றே அமெரிக்கா மற்றும் முதன்மையான உளவு அமைப்புகள் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |