வளர்ந்த நாடுகள் Vs வளரும் நாடுகள் இடையே அதிகரிக்கும் பொருளாதார இடைவெளி: ஐ.நா எச்சரிக்கை
வளரும் நாடுகளுக்கும், வளர்ந்து வரும் நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளி அதிகரித்து வருவதாக ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு 4 டிரில்லியன் டொலர் கூடுதல் முதலீடு தேவைப்படும் நிலையில், வளர்ந்த நாடுகள் நிதி உதவி வழங்குவதில் இருந்து பின்வாங்குவது நெருக்கடியை அதிகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உட்பட 25 வளர்ந்த நாடுகளின் பொருளாதார நிதி உதவி கிட்டத்தட்ட 23% குறைந்து இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த வீழ்ச்சி வரலாற்றில் மிகப்பெரிய வருடாந்திர வீழ்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் அமெரிக்கா மட்டும் 59% தனது வெளிநாட்டு பொருளாதார நிதி உதவியை குறைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் நடப்பு ஆண்டில் இந்த பொருளாதார நிதி உதவி 5.8% கூடுதலாக குறைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் வெளிநாடுகள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி வளரும் மற்றும் ஏழை நாடுகளின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏழை நாடுகளிடம் வசூலிக்கப்பட்ட வரி 9% இருந்து 28% ஆக அதிகரித்துள்ளது. இது ஏழை நாடுகளின் பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்கியுள்ளது.
எனவே இந்த நிதி நெருக்கடிகளை சமாளிக்க உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவை சீர்திருத்தங்களை அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |