இந்திய வீரர்க்ளுக்கு மட்டும் கிடைக்கும் மரியாதை... டிவில்லியர்ஸ்க்கு கிடைத்த ஆச்சரியம்! பலருக்கும் தெரியாத தகவல்
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மரியாதை, தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ்க்கு கிடைத்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஸ் சோப்ரா கூறியுள்ளார்.
உலக கிரிக்கெட் ரசிகர்களால 360 டிகிரி என்றழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ், தான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த போது, 2018-ஆம் ஆண்டு திடீரென்று ஓய்வை அறிவித்தார்.
இருப்பினும் ஐபிஎல் போன்ற தொடர்களில் டிவில்லியர்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஸ் சோப்ரா டிவில்லியர்ஸ் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை சச்சின், டோனி, கோஹ்லி, ரோகித் சர்மா ஆகியோர் மைதானத்திற்குள் காலடி எடுத்து வைத்தவுடன் அரங்கமே அதிரும். ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷத்தை எழுப்புவார்கள். அது ஒரு தனி மரியாதை.
அந்த மரியாதையை தென்னாப்பிரிக்க வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் பெற்றதை நான் பார்த்துள்ளேன். கடந்த 2015-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது.
அதில் அதிரடி காட்டிய டிவில்லியர்ஸ் 2 சதங்களை விளாசி அசத்தினார். அதில் குறிப்பாக வான்கடேவில் 119 ஓட்டங்களை விளாசிய போது அரங்கம் முழுவதும் ரசிகர்கள் ஏபிடி, ஏபிடி என பெரும் முழக்கமிட்டனர். அயல்நாட்டு வீரருக்கு இந்தியாவில் இப்படி ஒரு வரவேற்பா என அனைவரும் வியந்ததாக குறிப்பிட்டார்.