இரண்டு ஆண்டுகால சொதப்பல் ஆட்டம்: ஒருவழியாக 153 ஓட்டங்கள் விளாசிய CSK வீரர்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டெவோன் கான்வே 153 ஓட்டங்கள் விளாசினார்.
டெவோன் கான்வே
நியூசிலாந்து அணி புலவாயோவில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் துடுப்பாட்டம் ஆடி வருகிறது.
பல போட்டிகளில் சொதப்பி வந்த டெவோன் கான்வே (Devon Conway), கடந்த டெஸ்டில் 88 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.
ஆனால், இந்த டெஸ்டில் தொடக்க வீரராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார்.
டெஸ்டில் 2000 ஓட்டங்கள்
இரண்டு ஆண்டுகளுக்கு பின் அவர் மூன்று இலக்க ஸ்கோரை எட்டினார். மேலும் டெஸ்டில் 2000 ஓட்டங்களையும் எட்டினார்.
மொத்தம் 245 பந்துகளை எதிர்கொண்ட கான்வே, 18 பவுண்டரிகளுடன் 153 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடிய கான்வே, 4 போட்டிகளில் 94 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால் விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |