ஜிம்பாப்பேவை மீண்டும் தரைமட்டமாக்கிய ஹென்றி! புயல்வேக தாக்குதலில் சுருண்ட அணி
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்பே 125 ஓட்டங்களில் சுருண்டது.
மேட் ஹென்றி
புலவாயோவில் நியூசிலாந்து, ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் நடந்து வருகிறது.
ஜிம்பாப்பே அணி தனது முதல் இன்னிங்சை நேற்று தொடங்கியது. நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி (Matt Henry) தனது புயல்வேக பந்துவீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிரையன் பென்னெட் டக் அவுட் ஆக, நிக் வெல்ச் 11 ஓட்டங்களில் வெளியேறினார். மறுபுறம் ஸகாரி போல்க்ஸும் தாக்குதல் நடத்த ஜிம்பாப்பே மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
125 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
பிரண்டன் டெய்லர் 44 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கடைசிவரை களத்தில் நின்ற டிகா 33 ஓட்டங்கள் எடுத்தார்.
48.5 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த ஜிம்பாப்பே 125 ஓட்டங்களுக்கு சுருண்டது.
மேட் ஹென்றி (Matt Henry) 6வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஸகாரி போல்க்ஸ் 4 விக்கெட்டுகளும், ஃபிஷர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டுக்கு 174 ஓட்டங்கள் எடுத்தது.
வில் யங் (Will Young) 74 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, டெவோன் கான்வே (Devon Conway) 79 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |