தங்க ஆபரணத்திற்கு பஞ்சமில்லை.., திருப்பதியில் ஏழுமலையானுக்கு போட்டியாக வந்த பக்தர்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர் ஒருவர் நடமாடும் நகைக்கடையாக வந்ததால் சக பக்தர்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
பக்தர்
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்தவர் மதுசூதன். இவர் திருப்பதி ஏழுமலையானின் தீவிரமான பக்தர் ஆவார். அங்கு அவர் இரண்டு ஹொட்டல்களை சொந்தமாக நிர்வகித்து வருகிறார். மேலும், ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு வருகிறார்.
இதனால், இவருக்கு வருமானத்திற்கு மட்டும் பஞ்சமே இல்லை. அதுமட்டுமல்லாமல், தங்க ஆபரணங்களை அதிகமாக அணிவதில் மதுசூதனுக்கு அதீத ஆசை.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அமைச்சர் சதி.. நீதிமன்றத்துக்கு செல்வேன்: மாடுபிடி வீரர் அபிசித்தர் பரபரப்பான குற்றச்சாட்டு
2 கிலோவில் தங்க ஆபரணங்கள்
அதோடு, கோயில்களில் இறை மூர்த்திகளுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்களை அணிவதும் மதுசூதனுக்கு பழக்கமாக இருந்தது.
இந்நிலையில், பெரிய அளவிலான பிரேஸ்லெட், மோதிரங்கள், தங்கச் சங்கிலி, பெரிய டாலர் ஆகிய தங்க ஆபரணங்களை அணிந்து மதுசூதன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்துள்ளார். இவர் அணிந்திருந்த நகையின் எடையானது சுமார் 2 கிலோவுக்கு அதிகமானதாகும்.
அப்போது, சாமி தரிசனத்தை பார்க்க வந்த சக பக்தர்கள், இவரை பார்த்ததும் ஏழுமலையானுடன் போட்டி போடுவது போல தங்க நகைகளை அணிந்து வந்திருக்கிறார் என பேசிக் கொண்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |