மனைவி, மகளுடன் கெத்தாக வந்த டோனி! மீண்டும் களைகட்ட போகும் ஐபிஎல் தொடர்... வைரலாகும் புகைப்படங்கள்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நெருங்கும் நிலையில் குடும்பத்துடன் டோனி சென்னைக்கு வந்துள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடந்து வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் திகதி தொடங்கி அக்டோபர் 15 ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது.
இதனால் சிஎஸ்கே அணி வீரர்கள் சிலர் டோனியுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் டோனி தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் சென்னை விமான நிலையம் வந்துள்ளார். டோனியை காண சென்னை விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
Dhoni landed in for IPL 2021 ??@MSDhoni • #MSDhoni • #WhistlePodu pic.twitter.com/tM0zKLTtvP
— DHONI Era™ ? (@TheDhoniEra) August 10, 2021
இந்நிலையில் டோனி உள்ளிட்ட சில வீரர்கள் சென்னையில் இருந்து ஆகஸ்ட் 14 ஆம் திகதி ஐக்கிய அமீரகம் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பு முறைகள் ஆகியவை பின்பற்றப்பட இருப்பதால் அமீரகத்துக்கு முன்னதாகவே புறப்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Dhoni family is in chennai ?❤️@MSDhoni • #MSDhoni • #WhistlePodu pic.twitter.com/fS91WU6tTo
— DHONIsm™ ❤️ (@DHONIism) August 10, 2021