தோனி மீது விளம்பர விதிமுறைகள் மீறல் புகார் - பின்னணி என்ன? ரசிகர்கள் ஷாக்
தோனி மீது விளம்பர விதிமுறைகள் மீறல் புகார் எழுந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி
தற்போது நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி சிறப்பாக விளையாடி வருகிறார். தோனிக்கு முழங்காலில் காயம் இருந்தாலும், அந்த வலிகளையும் பொறுத்துக் கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி விளையாடிக்கொண்டு வருகிறார்.
இந்த ஐபிஎல் சீசன்தான் தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தபோது, திடீரென்று 'இது எனது கடைசி ஐபிஎல் சீசன் என நான் சொல்லவில்லை' என்று வர்ணனையாளரிடம் தோனி தெரிவித்து ரசிகர்களை இன்ப கடலில் மூழ்கடித்து உற்சாகப்படுத்தினார்.
தோனி மீது விளம்பர விதிமுறைகள் மீறல் புகார்
இந்நிலையில், தோனி மீது விளம்பர விதிமுறைகள் மீறல் புகார் அதிகமாக வந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பிரபலமாக இருக்கும் நபர்கள் விளம்பரங்களில் நடிக்கும்போது, அதன் உண்மை நிலையை அறிந்திருக்க வேண்டும். அப்படி அறியாமல் வெறும் பணத்திற்காக நடித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், விளம்பர தரநிலை கவுன்சில் (Advertising Standards Council of India) விளம்பர விதிமுறைகளை மீறியவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த விளம்பர பட்டியலில் தோனி பெயர் முதலிடம் பெற்றுள்ளது. 2வது இடத்தில் யூ- டியூப்பரான புவன் பாம் பெயர் இடம் பெற்றுள்ளளது.
முதலிடத்தில் இருக்கும் தோனி மீது தோனி மீது 10 புகார்களும், 2-வது இடத்தில் இருக்கும் புவன் மீது 7 புகார்களும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு 55 புகார்கள் வந்த நிலையில், இந்த ஆண்டு 503 புகார்களாக அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.