Wow... இது என் கடைசி சீசன் இல்லை... - சூசகமாக சொன்ன தோனி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
இது என் கடைசி சீசன் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி கூறிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி
16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பல மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், தோனியின் ரசிகர்களும், இந்திய கிரிக்கெட் முன்னாள், நடப்பு வீரர்களும் தோனி இன்னும் சில வருடங்களில் விளையாடலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டும், அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் விளாசிய இந்திய வீரர்களில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதலிடத்தில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் என்னை ரசிகர்கள் இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் மஞ்சள் படையுடன் பின்தொடர்வார்கள் என்று தோனி தெரிவித்தார்.
சூசகமாக சொன்ன தோனி
இந்நிலையில், ஐபிஎல் 2023 தொடர் லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது நேருக்கு நேர் மோதிக் கொண்டு வருகிறது.
இப்போட்டியின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தன் ஓய்வை உறுதிப்படுத்த மறுத்துள்ளார். "உங்கள் கடைசி சீசனை எப்படி ரசிக்கிறீர்கள்" என்று டேனி மோரிசன் கேட்டதற்கு, பதிலளித்த தோனி... இது என்னுடைய கடைசி சீசன், நான் அல்ல என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள்," என்று தோனி சிரித்துக்கொண்டே கூறினார்.
இதனையடுத்து, தோனி 2024-ல் மீண்டும் விளையாட வருவார் என்று கூட்டத்தினரிடம் டேனி மேரிசன் உறுதியாக அறிவித்தார். அப்போது, டேனியும், தோனியும் சிரித்து மகிழ்ந்து கொண்டனர். இச்செய்தியைக் கேட்டு மைதானத்தில் இருந்த தோனியின் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவைலத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
MSD keeps everyone guessing ?
— IndianPremierLeague (@IPL) May 3, 2023
The Lucknow crowd roars to @msdhoni's answer ??#TATAIPL | #LSGvCSK | @msdhoni pic.twitter.com/rkdVq1H6QK