தலைவா, கடவுள், லெஜண்ட்.... என்று தோனியை புகழ்ந்து தள்ளிய டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள்
தலைவா, கடவுள், லெஜண்ட் என்று தோனியை குறித்து டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
தோனியை புகழ்ந்து தள்ளிய டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள்
16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தோனிக்கு இந்த ஐபிஎல் போட்டி தான் கடைசி போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது கடைசி ஆட்டம் கிடையாது என்று தோனி அறிவித்து ரசிகர்களை இன்ப கடலில் மூழ்கடித்தார். முழங்காலில் காயம் ஏற்பட்டாலும், அந்த வலிகளையும் பொறுத்துக் கொண்டு தோனி ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. இரு அணிகளில் யார் இப்போட்டியை வெல்லப்போவது என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். சென்னை சேப்பாக்கம் பகுதி முழுவதும் மஞ்சள் நிற சட்டையை அணிந்து தோனி ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.
புகழ்ந்து தள்ளிய டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
தோனி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தொகுப்பாளர் டெல்லி கேபிடல்ஸ் அணியினர் கேட்க, அய்யோ அவரெல்லாம் கடவுள் சார்..., அவர் லெஜெண்ட் சார்... அவர் தலைவன் சார்... என்று தோனி மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த தோனி ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.
MSD means _____? ?#YehHaiNayiDilli #IPL2023 #CSKvDC #DCAllAccess pic.twitter.com/648GJsc5i4
— Delhi Capitals (@DelhiCapitals) May 10, 2023