தோனி மகள் ஜிவாவின் பள்ளிக்கட்டணம் எவ்வளவு தெரியுமா?
கிரிக்கெட் ஜாம்பவான் தோனியின் மகள் ஜிவாவின் பள்ளிக்கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மகேந்திர சிங் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு சாக்ஷி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு 2015 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜிவா என பெயரிட்டனர்.
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஐபிஎல் தொடரில் மட்டும் ஆடி வருகிறார். ஓய்வுக்கு பின்னர் தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார்.
ஜிவாவின் பள்ளிக் கட்டணம்
இந்நிலையில், தோனியின் மகள் ஜிவா படிக்கும் பள்ளி மற்றும் அதன் கட்டணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது 10 வயதான ஜிவா, தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள புகழ்பெற்ற பள்ளிகளில் ஒன்றான, டாரியன் வேர்ல்ட் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த பள்ளியில், முன்பள்ளி தொடங்கி 8ஆம் தரம் வரை ஆண்டு கட்டணமாக ரூ.4.40 லட்சமும், 9 முதல் 10ஆம் தரம் வரை உள்ள மாணவர்களுக்கு ரூ.4.40 லட்சமும் கல்விக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்திலே சீருடை, பாடப்புத்தங்களுக்கான கட்டணமும் அடங்கும் என கூறப்படுகிறது.
இந்த டாரியன் வேர்ல்ட் பள்ளியானது கடந்த 2008 ஆம் ஆண்டு, லண்டன் பொருளாதார பள்ளியின்(LSE) முன்னாள் மாணவரான அமித் பஜ்லா என்பவரால் துவக்கப்பட்டது.
இந்த பள்ளியில், இயற்கை விவசாயம், குதிரை சவாரி, உடல் மற்றும் மனநலனில் கவனம் செலுத்துவது என வழக்கமான பாடங்களுக்கு அப்பாற்பட்ட விடயங்களும் கற்றுத்தரப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |