முதல் காதலியுடன் டோனி இருக்கும் அரிய புகைப்படம்! வைரலாக்கும் ரசிகர்கள்: ஆனால் உண்மை இது தான்
இந்திய அணியின் முன்னாள் வீரரான டோனி, தன்னுடைய முதல் காதலியுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மை என்ன என்பது தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே டோனியின் முதல் காதலி என்று பிரியங்காவின் புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில், பிரியங்கா மற்றும் டோனி மட்டுமே இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இது உண்மையில்லை, குறித்த புகைப்படத்தில் டோனிக்கு அருகில் இருப்பது, அவருடைய மனைவி சாக்ஷிதான் என்பதும், இவர்கள் இருவரும் திருமணம் ஆன பின், முசிறிக்கு சென்ற போது, எடுத்த புகைப்படம் தான் அது என்பதும் தெரியவந்துள்ளது.
டோனி தற்போதைய மனைவியான சாக்ஷியை காதலிப்பதற்கு முன்னர், பிரியங்கா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ய நினைத்தார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக பிரியங்கா கார் விபத்து ஒன்றில் இறந்துவிடவே, டோனி மீண்டும் சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.