என்னை விட நீ ஒன்றும் மோசமாக விளையாடவில்லை…தோனி வார்த்தைகளால் மகிழ்ச்சியடைந்த சுப்மன் கில்!
இந்திய அணிக்காக முதல் முறையாக களமிறங்கி சொற்ப ஓட்டங்களில் வெளியேறியதால் கவலையாக இருந்த என்னிடம் தோனி கூறிய சில வார்த்தைகள் புத்துயிர் அளித்ததாக இளம் வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்காக முதல் ஆட்டம்
19 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி, 2019 ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் முறையாக இந்திய அணியில் இளம் வீரர் சுப்மன் கில் இடம் பெற்று இருந்தார்.
அந்த தொடரிலேயே இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு பெற்ற சுப்மன் கில், தனது முதல் ஆட்டத்தில் 21 பந்துகளில் 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி இருந்தார், இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியையும் சந்தித்து இருந்தது.
In conversation with Sonam Bajwa, Shubman Gill recalls his debut match against NZ and MS Dhoni's kind gesture towards him. ❤️ pic.twitter.com/NJ9rwKaqa9
— Shubman Gill FC (@shubmangillfans) November 18, 2022
இந்நிலையில் இந்திய அணிக்காக முதல் முறையாக களமிறங்குவது என்பது கிரிக்கெட்டில் பற்று கொண்டு இருக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய தருணம், அப்படிப்பட்ட தருணத்தில் சொற்ப ஓட்டங்களில் வெளியேறியதால் நியூசிலாந்து எதிரான போட்டிக்கு பிறகு மிகவும் சோகமாக உட்கார்ந்து இருந்தாகவும் அப்போது ஜாம்பவான் தோனி கூறிய அந்த வார்த்தைகள் புத்துயிர் தந்ததாக இளம் வீரர் சுப்மன் கில் சோனம் பஜ்வா தொகுத்து வழங்கும் 'தில் தியான் கல்லன்' (Dil Diyan Gallan) என்ற அரட்டை நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
தோனி கூறிய வார்த்தைகள்
முதல் ஆட்டமே மோசமான மிகவும் குறைவான ஓட்டங்களை சேர்த்ததால் மிகவும் கவலையுடன் ஓரமாக நான் உட்கார்ந்து இருந்தேன், அப்போது நான் கவலையாக இருப்பதை பார்த்து என்னிடம் வந்த தோனி, அவர் இந்திய அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியை நினைவுப்படுத்தி, “என்னுடைய முதல் ஆட்டத்தை விட உன்னுடைய முதல் ஆட்டம் ஒன்றும் மோசமாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
MS Dhoni hands ODI cap to Shubman Gill-தோனி ஒருநாள் போட்டிக்கான தொப்பியை சுப்மான் கில்லிடம் வழங்குகிறார்
அப்போது தான் ஒரு பந்தை கூட எதிர் கொள்ளாமல் முதல் ஆட்டத்திலேயே ரன் அவுட் ஆகி வெளியேறிய தோனியின் முதல் இன்னிங்ஸ் நினைவுக்கு வந்தாகவும் அதன் பின் புன்னகையுடன் புத்துயிர் பெற்றதாகவும் சுப்மன் கில் அந்த அரட்டை நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
I was sad after getting out early. MS Dhoni then told me, at least your debut was better than mine. - @ShubmanGill pic.twitter.com/aOTrrmvWdf
— DIPTI MSDIAN (@Diptiranjan_7) November 19, 2022