அவுட் இல்லை தெரிந்தும்...ரிவ்யூவை வீணடித்த டோனி! கிண்டல் செய்யும் மற்ற அணி ரசிகர்கள்
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், ரிவ்யூவை டோனி விணடித்த புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.
இந்நிலையில், கொல்கத்தா அணி கடைசி ஓவர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, சென்னை அணிக்கு கடைசி ஓவரை ஜோஷ் ஹசல்வுட் வீசினார்.
அப்போது அந்த ஓவரின் போது, சுனில் நரைன் அடித்து ஆட முற்பட, ஆனால் பந்தானது அவரை ஏமாற்றி கீப்பரான டோனியிடம் சென்றது.
Dhoni Review System ?? pic.twitter.com/k0cbdzRUEO
— Cricket Page (@CricketPage3) September 26, 2021
அப்போது பேட் தான் கீழ் தரையில் பட்டது, உடனே சக வீரர்கள் அவுட் கேட்க, நடுவர் இல்லை என்றவுடன் டோனி ரிவ்யூ சென்றார்.
#Tamil cricket commentary when #Dhoni going to review : DRS it means Dhoni review system Thala never failed it machaan
— ?Sachin Rajavel?? (@RP_Rajavell) September 26, 2021
Finally the Review failed then they said : it was a last before ball so he take the review for fun machaan ???#IPL2021 #CSK #KKRvCSK #DRS pic.twitter.com/eSnEp9vWjs
ஆனால், அதில் அவுட் இல்லை என்று வந்தது. இதற்கு முன்பு சென்னை ரசிகர்கள் டோனி ரிவ்யூ எப்போதுமே மாறாது என்று டிரண்டாக்கி வருவர்.
ஆனால், இந்த முறை அது அவுட் இல்லை என்று தெரிந்தும், டோனி தேவையில்லாமல் ரிவ்யூ எடுத்துவிட்டார் என்று மற்ற ஐபிஎல் ரசிகர்கள் இதை டிரண்டாக்கி வருகின்றனர்.