“தோனி அடுத்த சீசனில் விளையாடுவார்” - மகிழ்ச்சியான செய்தியை கூறிய சென்னை அணி CEO
2025 ஆண்டு IPL தொடரிலும் MS தோனி விளையாடுவார் என சென்னை அணி CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தோனி குறித்து பேசிய CEO
CSK அணியானது ஐந்து இந்தியன் பிரீமியர் லீக் பட்டங்களை பெற வைத்து சாதனை படைத்த தோனி, நடப்பு சீசன் தொடங்கும் முன் கேப்டன் பதவியில் இருந்து விலகி, ருதுராஜ் கெய்க்வாடிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இந்த போட்டியில் தோனியின் இறுதி சீசனாக இருக்கலாம் என்று பலரும் கவலையில் இருந்தார்கள்.
நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் மட்டுமெ வெற்றிப் பெற்று 14 புள்ளிகளை பெற்றிருந்தது.
அதையடுத்து கடந்தா 18 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதி, நாக் அவுடில் சென்னை அணி தோல்வி அடைந்தது.
நெட் ரன் ரேட் குறைந்ததால் அதே 14 புள்ளிகளை பெற்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்தது.
சென்னை அணியின் தல எனப்படும் தோனி இந்த சீசனில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல்கள் பரவி வந்தன.
ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை MS தோனி தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன் தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ளார்.
அதாவது, தோனி ஓய்வு பெறுகிறாரா அல்லது விளையாடுகிறாரா என்பது குறித்து அவர் தான் பதில் அளிக்க முடியும். அவர் எடுக்கப் போகும் முடிவிற்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும்.
இருப்பினும் அடுத்த சீசனில் தோனி விளையாடுவார் என நம்புகிறோம். அடுத்த சீசனிலும் தோனி விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அதுவே ரசிகர்களின் எதிர்பார்பாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியானது தற்போது சென்னை அணி ரசிகர்களிடையே சந்தோஷத்தை எழுப்பி வருகின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |