2050-க்குள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 130 கோடியக இருமடங்காகும்: ஆய்வு
உலகளவில், 2050-ஆம் ஆண்டுக்குள் 1.3 பில்லியன் (130 கோடி) மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு-130 கோடியாக உயரும்
உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, அடுத்த 30 ஆண்டுகளில் 130 கோடியாக இருமடங்காக உயரும் என்று புதிய ஆராய்ச்சி கணித்துள்ளது.
2050 வரையிலான உலகளாவிய தரவுகளின் மிக விரிவான பகுப்பாய்வின்படி, உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காணும்.
AFP
சுமார் 529 மில்லியன் மக்கள் ஏற்கனவே நீரிழிவு நோயுடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
லான்செட் இதழில் (Lancet journal) வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 95 சதவிகிதம் டைப் 2 நீரிழிவு (type 2 diabete) நோயாளிகள் கொண்ட அந்த எண்ணிக்கை, மூன்று தசாப்தங்களுக்குள் 130 கோடிக்கு மேல் இருக்கும்.
காரணிகள்
மக்கள் அதிக எடையுடன் (High body mass index ) இருப்பதால் தான் நீரிழிவு நோயால் ஏற்படும் இறப்புகள் மற்றும் இயலாமை பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மற்ற காரணிகளில் மக்களின் உணவுமுறை, உடற்பயிற்சி, புகைபிடித்தல் மற்றும் மதுபானம் ஆகியவை அடங்கும்.
Freepik pic
உணவு முறை மாற்றம்
லியான் ஓங் (Liane Ong), இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் இவால்யுவேஷன் (IHME) இன் முன்னணி ஆராய்ச்சி விஞ்ஞானி மற்றும் ஒரு ஆய்வின் முதல் ஆசிரியரும், உணவு முறை மாற்றம் ஒரு காரணி என்றார்.
அடுத்த 30 ஆண்டுகளில், வெவ்வேறு நாடுகள் உண்மையில் பாரம்பரிய உணவுப் பழக்கங்களிலிருந்து மாறியிருக்கும்- ஒருவேளை அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான கீரைகளை சாப்பிட்டு வந்தவர்கள் வருங்காலத்தில் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு மாறலாம் என்று அவர் கூறினார்.
medscape
2045 ஆம் ஆண்டளவில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட முக்கால்வாசி பெரியவர்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழ்வார்கள் என்றும் ஆராய்ச்சி மதிப்பிட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் கூட, சிறுபான்மையினரான கருப்பு, ஹிஸ்பானிக், ஆசிய அல்லது பூர்வீக அமெரிக்கர்களிடையே நீரிழிவு விகிதம் கிட்டத்தட்ட 1.5 மடங்கு அதிகமாக உள்ளது என்று ஒரு தனி லான்செட் ஆய்வு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் கவனம் தேவை
நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்கு நீண்ட கால திட்டமிடல், முதலீடு மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளின் கவனம் தேவைப்படும் என்று அவர் கூறினார்.
"நீரிழிவு நோய் இந்த நூற்றாண்டின் வரையறுக்கும் நோயாக இருக்கும்," என்று ஆய்வு கூறுகிறது.
Type-2 Diabetes, Research, diabetes
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |