சர்க்கரை நோய் இருந்தாலும் பயம் வேண்டாம்.... நீங்கள் இந்த இனிப்பை தைரியமாக சாப்பிடலாம்
Diabetes
By Kirthiga
பொதுவாகவே வயது வந்தவர்கள் முதல் இளம்வயதினர் வரை நீரிழிவு நோயினால் பாதிப்படைகின்றார்கள்.
நீரிழிவு என்பது வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய நோயாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொல்கிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டால் எவ்வகையான அறிகுறிகள் ஏற்படும் எனவும் இந்நேரத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடிய இனிப்பு வகைகள் பற்றியும் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
நீரிழிவு நோய் வருவதற்கான காரணம் என்ன?
ரத்த ஓட்டத்தில் உள்ள அனைத்து சர்க்கரையையும் (குளுக்கோஸ்) உடலால் செயல்படுத்த முடியாதபோது இது ஏற்படுகிறது.
நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள்,
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- தோலில் அரிப்பு ஏற்படுதல்
- கண் பார்வை மங்கலடைதல்
- சோர்வு மற்றும் பலவீனமாக உணர்தல்
- பாதம் மறத்துப்போதல்
- அதிகமான தாகம்
- காயங்கள் மெதுவாக ஆறும்
- எப்பொழுதும் பசியோடு இருத்தல்
- எடைகுறைதல்
- தோல் வியாதிகள் ஏற்படுதல்
- சிந்திக்க முடியாத அளவு தலைபாரம்
- இதய பாதிப்பு
- மன ஆரோக்கிய பாதிப்பு
- சிறுநீரக பாதிப்பு
- நரம்பு மண்டல பாதிப்பு
- சரும பிரச்சினைகள்
- நோய் எதிர்ப்பு மண்டல பாதிப்பு
பயம் இல்லாமல் சாப்பிடக்கூடிய இனிப்புகள்
- நீரிழிவு நோயாளிகள் கிரேக்க தயிர் (Greek yogurt) எடுத்துக்கொள்ளலாம். இது டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
- தினமும் சாப்பாடு சாப்பிடுவதற்கு முன், ஒரு ஆப்பிளை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
- 28 கிராம் டார்க் சாக்லேட்டில் வெறும் 13 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே இதை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அளவு குறையும்.
- 140 கிராம் பேரிக்காயில் 21.3 கிராம் கார்போஹைட்ரேட்டு, 4 கிராம் நார்ச்சத்து காணப்படுகிறது. இதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
- சியா விதை நார்ச்சத்து, புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருகிறது. தினமும் இதை எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை அளவு குறையும்.
- இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கு 4 வாரம் தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிடலாம்.
- பாதாம், பெக்கன்கள், முந்திரி, பூசணி விதைகள் ஆகியவற்றை சேர்த்து வீட்டில் தயாரிக்கப்பட்ட டிரெயில் கலவையானது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக இருக்கும்.
- ஓட்ஸ், தேங்காய், வேர்க்கடலை வெண்ணெய், மற்றும் ஆளிவிதை ஆகியவற்றை ஒரு சிறிய அளவு சாக்லேட்டுடன்சேர்த்து சாப்பிடுவது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US