பல ஆண்டுகளாக மூக்கில் சிக்கியிருந்த பகடை! அவதியின் உச்சத்தில் 23 வயது இளைஞர்
மூக்கில் பல ஆண்டுகளாக பகடை ஒன்று சிக்கியிருந்ததால் சீன இளைஞர் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளார்.
சீன இளைஞரின் அவதி
சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் சியோமா, கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக தும்மல் மற்றும் சளி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.
பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகும் நிவாரணம் கிடைக்காத நிலையில், மருத்துவர்கள் அவருடைய நாசிக்குழியில் 2 செ.மீ அளவுள்ள பகடை(Dice) ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர்.
பகடை பல ஆண்டுகளாக திசுகளுடன் இணைந்து இருந்ததால் அவற்றை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுப்பது மிகவும் சிரமாக இருந்ததாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மூன்று அல்லது நான்கு வயதில் தற்செயலாக மூக்கில் சென்றிருக்கலாம் எனக் கருதப்படும் இந்த பகடை, நீண்ட காலமாக நாசி குழியில் இருந்ததால் அரிக்கப்பட்டு, சியோமாவிற்கு ஒவ்வாமை மற்றும் நாசி அலர்ஜியை ஏற்படுத்தியிருக்கிறது.
அறுவை சிகிச்சை மூலம் பகடை வெற்றிகரமாக அகற்றப்பட்டாலும், இந்த சம்பவம் குழந்தைகளை கவனிப்பதில் பெற்றோர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |