சர்வாதிகாரி என்று கூறினேனா? திரும்பவும் ட்ரம்ப் அடித்தார் அந்தர் பல்டி
ரஷ்ய உக்ரைன் போர் தொடர்பில் தொடர்ந்து உக்ரைனை குறை கூறி வந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியது உண்மைதான் என அந்தர் பல்டி அடித்தது நினைவிருக்கலாம்.
திரும்பவும் ட்ரம்ப் அடித்தார் அந்தர் பல்டி
தற்போது மீண்டும் ஒரு அந்தர் பல்டி அடித்துள்ளார் ட்ரம்ப்.
ஆம், உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை ட்ரம்ப் சர்வாதிகாரி என விமர்சித்ததை உலகமே அறியும்.
— Donald J. Trump (@realDonaldTrump) February 19, 2025
ஆனால், தற்போது தான் ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி என விமர்சித்ததாக தனக்கு ஞாபகம் இல்லை என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
ஆகவே, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனைப்போல் ட்ரம்புக்கும் ஞாபக மறதி நோய் வந்துவிட்டதோ என ஊடகங்கள் கேலியாக விமர்சித்துள்ளன.
ஊடகவியலாளர் ஒருவர், இன்னமும் நீங்கள் உக்ரைன் ஜனாதிபதி ஒரு சர்வாதிகாரி என்றே நினைக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு, நான் அப்படிச் சொன்னேனா என பதில் கேள்வி எழுப்பினார் ட்ரம்ப்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |