இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , பெசில் வெளியேற இந்தியா உதவியதா?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக இந்தியா ஒத்துழைப்பு வழங்கியதாக தகவல் வெளியாகியாகின.
இருப்பினும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து டிவிட் ஒன்றை வெளியிட்டுள்ளது,
அதில் “கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பெசில் ஆகியோர் இலங்கையைவிட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக ஆதாரங்களின்றியும் ஊகங்களின் அடிப்படையிலும் வெளியாகியிருக்கும் செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் முற்றாக நிராகரிக்கின்றது.
ஜனநாயகபெறுமானங்கள் மற்றும் விழுமியங்கள்,நிறுவனமயப்படுத்தப்பட்ட ஜனநாயகஅமைப்புகள் மற்றும் அரசியலமைப்புரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக செழுமை மற்றும் முன்னேற்றத்தினை நனவாக்க எதிர்பார்த்திருக்கும் இலங்கைமக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்குமென மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது” என குறிப்பிட்டப்பட்டுள்ளது.