மகளுக்காக பாஜகவில் கட்சியை இணைத்தாரா சரத்குமார்? பின்னணியில் இருக்கும் NIA விவகாரம்
மகள் வரலட்சுமிக்காக தனது கட்சியை நடிகர் சரத்குமார் பாஜகவில் இணைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளிவருகிறது.
பாஜகவில் கட்சி இணைப்பு
அண்மையில் நடிகர் சரத்குமார், பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பாஜகவுடன் இணைத்தார்.
இதுகுறித்து சரத்குமார் கூறுகையில், "மக்கள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன எனத் தோன்றியதால் நள்ளிரவில் அண்ணாமலையை அழைத்துக் கூறினேன்" என்றார்.
வரலட்சுமி விவகாரம்
சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளர் ஆதிலிங்கம். இவர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுத விநியோகத்தில் சர்வதேச கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதை என்ஐஏ கண்டறிந்தது.
பின்னர், ஆதிலிங்கத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் போதைப்பொருள் மூலம் கிடைத்த வருமானத்தை சினிமாவில் முதலீடு செய்திருப்பது தெரியவந்தது.
இதனால் அவர், பிஏவாக இருந்த நடிகை வரலட்சுமியை விசாரிக்க என்ஐஏ முடிவு செய்தது. இதனிடையே, வரலட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராவதற்கு காலவகாசம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தான் சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார். தனது மகள் வரலட்சுமிக்கு எந்தவொரு சிக்கலும் வரக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக பேசப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |