நேர்மையாக இருந்த காரணத்திற்காக மரணத்தை தழுவி கொண்ட திருமணமாகாத நடுத்தர வயது பெண்
இந்தியாவில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருந்த காரணத்திற்காக மரணத்தை தழுவி கொண்டுள்ளார் ஒரு பெண்.
கேரளாவின் வயநாட்டில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சிந்து (42) என்ற பெண் கடந்த 9 ஆண்டுகளாக சீனியர் கிளர்க்காக வேலை பார்த்தார். மாற்றுத்திறனாளியான இவர் நேர்மையாக தனது கடமையை செய்து வந்துள்ளார்.
திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த சிந்து லஞ்சம் வாங்கவும் மறுத்துள்ளார். இதனால் சக ஊழியர்களுக்கு சிந்துவை பிடிக்காமல் போனது, மனதளவில் அவருக்கு டார்ச்சர் கொடுத்து அலுவலகத்தில் அவரை தனிமை படுத்தியுள்ளனர்.
இதையடுத்து தனது வேலை பறிபோய்விடுமோ என உறவினர்களிடம் சிந்து புலம்பி வந்தார். இந்நிலையில் தனது சகோதரர் வீட்டில் சிந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரின் இந்த முடிவுக்கு சக ஊழியர்கள் தான் காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதே நேரத்தில் சிந்துவுக்கு அலுவலகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் வேறு காரணங்களுக்காக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் ஆர்.டி.ஓ கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து சிந்துவின் உறவினர்கள் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.