SEBI எச்சரிக்கைக்கு பின் புதிய ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கும் டிஜிட்டல் தங்க நிறுவனங்கள்
இந்தியாவில் டிஜிட்டல் தங்க முதலீடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், முக்கிய நிறுவனங்கள் சுய ஒழுங்குமுறை அமைப்பு (Self-Regulatory Organisation – SRO) ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன.
SEBI சமீபத்தில் வெளியிட்ட எச்சரிக்கைக்கு பின் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
SEBI, “டிஜிட்டல் தங்க துறை தற்போது ஒழுங்குமுறை இல்லாதது. முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, MMTC-PAMP, Augmont, CaratLane, Jar, SafeGold போன்ற நிறுவனங்கள் இணைந்து, வாடிக்கையாளர்களின் முதலீடுகள் பாதுகாப்பாக இருக்க வழிகாட்டுதல்களை உருவாக்கும் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் உள்ளன.

இந்த SRO, வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் தங்கம் முழுமையாக உண்மையான தங்கத்தால் (physical gold) ஆதரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யும். மேலும், தங்கம் பாதுகாப்பான வால்ட்களில் சேமிக்கப்படுகிறதா என்பதை சுயாதீனமாக தணிக்கை செய்யும்.
தற்போது, இந்தியர்களின் டிஜிட்டல் தங்க முதலீடு சுமார் ரூ.55,000 கோடி மதிப்பில் உள்ளது.
இந்த முதலீடுகள், MMTC, SafeGold, Brink’s போன்ற நிறுவனங்கள் நிர்வகிக்கும் வால்ட்களில் physical gold-ஆல் ஆதரிக்கப்படுகின்றன.
“இந்த SRO உருவாக்கம், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். மேலும், எதிர்காலத்தில் அரசு ஒழுங்குமுறை வரும்போது, துறைக்கு வலுவான அடித்தளமாக இருக்கும்” என துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த நடவடிக்கை, நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Digital gold self-regulatory organisation India, SEBI advisory digital gold regulation 2025, MTC-PAMP SafeGold Augmont CaratLane SRO, Paytm PhonePe Google Pay digital gold sellers, India digital gold investment Rs 55,000 crore, Digital gold UPI transactions October 2025 rise, Digital gold audit physical gold backing vaults, SEBI caution digital gold fraud concerns, Gold ETFs vs digital gold India regulation, India fintech platforms digital gold savings