பின்லாந்தில் அறிமுகமாக டிஜிட்டல் கடவுச்சீட்டு; உலகளவில் எதிர்பார்க்கும் மக்கள்!
தொலைபேசி செயலி அடிப்படையில் செயல்படும் டிஜிட்டல் எனப்படும் எண்ணியல் முறையிலான கடவுச்சீட்டை பின்லாந்து அறிமுகம் செய்துள்ளது.
டிஜிட்டல் கடவுச்சீட்டு
இந்த கடவுச்சீட்டு முறைமையின் முன்னோடி திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி பின்லாந்து அரசு தொடங்கியிருந்தது.
பயண தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த எண்ணியல் முறையிலான கடவுச்சீட்டை சோதிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமைந்துள்ளது.
இந்த திட்டம் ஹெல்சின்கியில் இருந்து இங்கிலாந்து திரும்பும் சில விமான பயணிகளுக்கு மாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
எளிது, வேகம், பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்ட இந்த எண்ணியல் முறையிலான கடவுச்சீட்டு திட்டம் சோதனை அடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி 2024 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து, குறித்த திட்டத்தில் உள்ள நிறைகுறைகளை ஆராய்ந்து, நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இந்த திட்டம் உலகளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என நம்பப்படுவதாக அந்த அரசு மேலும் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |