விடுமுறைக்காக வெளிநாடு புறப்பட்ட மக்களுக்கு ஜேர்மன் விமான நிலையங்களில் காத்திருந்த ஏமாற்றம்
ஜேர்மனியில் விடுமுறை காலம் துவங்கியுள்ள நிலையில், வெளிநாடு செல்ல புறப்பட்ட மக்களுக்கு எதிர்பாராத ஏமாற்றம் ஒன்று காத்திருந்தது.
ஓடுபாதையில் அமர்ந்த பருவநிலை மாற்ற ஆர்வலர்கள்
ஜேர்மனியின் Hamburg மற்றும் Dusseldorf விமான நிலையங்களுக்குல் நுழைந்த பருவநிலை மாற்ற ஆர்வலர்கள், ஓடுபாதைகளில் பசை போட்டு தங்களை தரையுடன் ஒட்டவைத்துக்கொண்டனர்.
இதனால், விமானங்கள் புறப்படுவதில் பிரச்சினை ஏற்பட்டது. மக்கள் மகிழ்ச்சியுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா புறப்பட்ட முதல் நாளிலேயே இந்த பருவநிலை மாற்ற ஆர்வலர்கள் பயணங்களுக்கு இடையூறாக வந்து அமர்ந்துகொண்டதால் மக்கள் எரிச்சலடைந்துள்ளனர்.
பருவநிலை மாற்ற ஆர்வலர்களின் நோக்கம் தங்களுக்குப் புரிவதாகத் தெரிவிக்கும் பயணிகள் சிலர், ஆனால், அதற்காக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது சரியல்ல என்று விமர்சித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |