ரஷ்ய விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு...டெல்டா வைரசால் ஒருவர் உயிரிழப்பு! உலக செய்திகள்
கனடா ஒன்றியோவில் டெல்டா வகை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேலிங்டனில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லத்திலேயே இந்த மரணம் பதிவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி ரஷ்யாவில் 28 பேருடன் காணாமல் போன விமானத்தின் சிதைவுகள், அந்நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்விமானத்திலிருந்த ஒரு குழந்தை உட்பட அனைவரும் உயிரிழந்துள்ளனர் என அஞ்சப்படுவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களை வீடு வீடாகத் தேடிச்சென்று ஊசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.