அமுலுக்கு வந்த போர் நிறுத்தம்: வடக்கு காசாவிற்கு இடம்பெயரும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள்
போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
வீடுகளுக்கு திரும்பும் காசா மக்கள்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்ததை அடுத்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
போர் நிறுத்தம் அறிவிக்கபப்ட்டதை தொடர்ந்து இஸ்ரேலிய படைகள் தங்கள் இருப்புகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதையடுத்து வடக்கு காசாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மீண்டும் இடம்பெயர தொடங்கியுள்ளனர்.
2023 அக்டோபர் 7ம் திகதி தாக்குதலுக்கு பிறகு மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசா பகுதியில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் மக்கள் தங்கள் உடைமைகளை சுமந்து கொண்டு வடக்கே திரும்பிச் செல்லும் காட்சிகளை பார்க்க முடிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |