மன உளைச்சலில் இருந்த கல்லூரி மாணவி: 13 -வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு
பெங்களூருவில் 13 -வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன உளைச்சலில் மாணவி
பெங்களூரு நாகரபாவி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (17). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 2 வாரமாக மன உளைச்சலில் இருந்ததாகவும், வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு, விஜயலட்சுமி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். பின்பு, வீட்டில் உள்ளவர்கள் அவரை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் ஞானபாரதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பின்னர், பொலிசார் புகார் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, தர்மஸ்தலாவுக்கு சென்று, நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமியை வயதானவர் ஒருவர் மீட்டுள்ளார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெங்களூரு பொலிசார் விஜயலட்சுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மாடியில் இருந்து குதித்து தற்கொலை
இந்நிலையில், விஜயலட்சுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது நாகரபாவி மைசூரு சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு, 13 -வது மாடியின் மேலிருந்து கீழே குதித்துள்ளார்.
அப்போது, ரத்த வெள்ளத்தில் இருந்த விஜயலட்சுமி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பின்பு, இதுகுறித்து பேடராயனபுரா பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |