பக்கத்து வீட்டிலிருந்து கேட்ட சத்தத்தால் தொல்லை: பொலிசாரை அழைத்த பிரான்ஸ் நாட்டவர்
சில நாடுகளில் மற்றவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் சத்தம் உருவாக்குவது குற்றமாக கருதப்படுகிறது. உதாரணமாக, சுவிட்சர்லாந்தில், இரவு நேரங்களில் டாய்லெட்டை ஃப்ளஷ் செய்வது கூட தொந்தரவாக கருதப்படுவதாக தகவல்கள் வெளியானதுண்டு.
பிரான்சில் பிரபலமான குற்றச்சாட்டுகள்
அதே நேரத்தில், பிரெஞ்சு கிராமம் ஒன்றில் Maurice என்னும் சேவல் தினமும் அதிகாலையில் எழுப்பும் சத்தம் தங்களை தூங்கவிடாமல் தொந்தரவு செய்வதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் நீதிமன்றம் செல்ல, நீதிமன்றம், கலாச்சாரத்தை மதிக்கத் தெரியாதா என குற்றம் சாட்டியவர்களையே கேள்வி கேட்டு, அவர்களுக்கு 1,000 யூரோக்கள் அபராதம் விதித்த செய்தி தலைப்புச் செய்தியானது.
அதேபோல, Pitikok என்னும் சேவல் குறித்த ஒரு செய்தியும் கவனம் ஈர்த்தது.
Source: The Guardian
பக்கத்து வீட்டிலிருந்து கேட்ட சத்தத்தால் தொல்லை
இந்நிலையில், சமீபத்தில், Frontenex என்னும் கிராமத்தில் வாழும் Colette Ferry (92) என்னும் பெண்மணியின் வீட்டுக் கதவை பொலிசார் தட்டியுள்ளார்கள்.
கதவைத் திறந்த Coletteஇடம், அவரது வீட்டிலிருந்து வரும் சத்தம் தொந்தரவாக இருப்பதாகவும், தன்னால் தூங்க இயலவில்லை என்றும் பக்கத்து வீட்டுக்காரர் புகார் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள் பொலிசார்.
விடயம் என்னவென்றால், அந்தப் பெண்மணியின் வீட்டின் பின்னாலுள்ள தோட்டத்தில் அவர் அமைத்துள்ள குளத்தில் அவர் மீன் வளர்க்கிறார்.
அந்த குளத்துக்கு மூன்று தவளைகள் வந்துள்ளன. அந்த தவளைகள் எழுப்பும் சத்தம் குறித்துத்தான் அவரது பக்கத்து வீட்டுக்காரர் புகார் தெரிவித்துள்ளார்.
Source: The Guardian
ஆகவே, பொலிசார் அந்த தவளைகளை அப்புறப்படுத்திவிடுவோம் என Coletteஇடம் கூறியுள்ளார்களாம்.
இதேபோல Grignols என்னும் கிராமத்தில் ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. ஒன்பது ஆண்டுகள் அந்த வழக்கு நடைபெற்றது. முடிவில், தங்கள் வீட்டுத் தோட்டத்திலுள்ள குளத்தில் வாழும் தவளைகளை அப்புறப்படுத்தவேண்டும் என சம்பந்தப்பட்ட Michel மற்றும் Annie Pécheras தம்பதியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.