புரட்டி எடுக்கும் டிட்வா புயல் - நிவாரண முகாமாக மாறும் கிரிக்கெட் மைதானம்
டிட்வா புயலால் சர்வதேச கிரிக்கெட் மைதானம் நிவாரண முகாமாக மாற்றப்பட உள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நிவாரண முகாமாகும் கிரிக்கெட் மைதானம்
நேற்று இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் உருவான டிட்வா புயல்(Ditwah Cyclone) காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில், அதி கனமழை பெய்து, குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, தற்போது வரை 56 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும், 20 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
ஒரு சில அத்தியாவசிய ரயில் சேவைகளைத் தவிர, அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை தற்காலிகமாக தங்க வைக்க கொழும்பில் அமைந்துள்ள பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம்(R.premadesa stadium) அவசர பேரிடர் நிவாரண மையமாக மாற்றப்பட்டுள்ளது.

ஆபத்தான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட 3000 மக்கள் இங்கு தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் வழங்கப்பட உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |