தீபாவளி பண்டிகையை பொது விடுமுறையாக அறிவிக்கிறது நியூயார்க்
நியூயார்க் நகரில் தீபாவளி பண்டிகையானது ஒரு பாடசாலை விடுமுறை நாளாக அறிவிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து அந்நகர மேயர் எரிக் ஆடம்ஸ், தீபாவளியை நியூயார்க் நகர பொது பாடசாலை விடுமுறையாக மாற்றும் மசோதாவை மாநில சட்டமன்றமும் மாநில செனட்டும் நிறைவேற்றியதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது இந்திய சமூகத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து சமூகத்தினருக்கும் கிடைத்த வெற்றி என்றும் கூறியுள்ளார்.
அங்கு வாழும் அனைத்து மதத்தவர்களுக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்ற நோக்கிலே இதை முன்னெடுத்துள்ளதாகவும், இனி வரவிருக்கும் ஒவ்வொரு ஆண்டும் நியூயார்க் நகரமானது வெகுவிமர்சையாக தீபாவளி பண்டிகையை கொண்டாடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து வாழ் மக்களும் நியூயார்க் நகரின் இந்த முடிவை வரவேற்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |