ரஷ்யாவுடனான வணிகத்தை நிறுத்துகிறோம்... சீன நிறுவனம் அதிரடி அறிவிப்பு
ரஷ்யாவுடனான வணிகத்தை இடைநிறுத்துவதாக சீன டிரோன் தயாரிப்பு நிறுவனமான DJI அறிவித்துள்ளது.
மோதலில் தங்கள் பொருட்கள் பயன்படுத்தாததை உறுதி செய்ய ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுடனான வணிகத்தை இடைநிறுத்துவதாக உலகின் மிகப்பெரிய டிரோன் தயாரிப்பு நிறுவனமாக DJI அறிவித்துள்ளது.
DJI நிறுவனத்தின் செய்தித்தொர்பாளர் கூறியதாவது, எங்கள் ட்ரோன்கள் சேதங்களை விளைவிப்பதற்காக பயன்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை.
மேலும், எங்கள் டிரோன்களை யாரும் போரில் பயன்படுத்தக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக இரு நாடுகளுக்கு விற்பனையை தற்காலிகமாக நிறுத்துகிறோம் என தெரிவித்தார்.
போரில் ஏழ்மையான ரஷ்ய வீரர்களை பலிகடா ஆக்கிய புடின்! அம்பலமான உண்மை
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியது முதல் முதன் முறையாக ரஷ்யா உடனான வணிகத்தை நிறுத்தும் முதல் பெரிய சீன நிறுவனம் DJI என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த நாட்டைப் பற்றியும் அறிக்கை வெளியிடுவது எங்கள் நோக்கம் அல்ல, ஆனால் இது எங்கள் கொள்கைகளைப் பற்றி ஒரு அறிக்கை என்று நிறுவனம் கூறியுள்ளது.
ரஷ்ய மற்றும் உக்ரேனிய படைகள் DJI டிரோன்களை முதன்மையாக உளவு நோக்கங்களுக்காக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.