வெளிநாட்டு கரன்சிகள்... குவியல் குவியலாக தங்கம்! திமுக எம்பி-யின் வீட்டில் சிக்கியது என்ன?
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 5 நாட்களாக நடத்தி வந்த சோதனை நிறைவடைந்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக திமுக எம்பியான ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
கடந்த 5 நாட்களாக ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை நடந்து வந்தது.
இதில் வெளிநாட்டில் சட்டவிரோத முதலீடு செய்திருந்ததாக 89.19 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் முடக்கினர்.
மேலும் ஜெகத்ரட்சகன் தனது கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் பெற்ற வருவாயை முறையாக கணக்கு காட்டாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து ஜெகத்ரட்சகனின் மருமகன்கள் வீட்டிலும் சோதனை நடந்ததாகவும், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிகிறது.
5 பெட்டிகளில் எடுத்துச்செல்லப்பட்டதாகவும், அதில் கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுக்கள், வெளிநாட்டு கரன்சிகள், தங்கம், விலையுயர்ந்த பொருட்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |