இணைய வேகம் மந்தமாகின்றதா? தொலைபேசி அழைப்புக்கள் ட்ரொப் ஆகின்றதா?
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக துல்லியம் வாய்ந்த தொலைபேசி அழைப்புக்களையும், அதிக வேகம் கொண்ட இணையத்தையும் பயன்படுத்தக்கூடியதாக இருகின்றது.
இருந்தும் சில சமயங்களில் இவற்றில் பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு.
அதாவது தொலைபேசி அழைப்புக்கள் ட்ரொப் ஆதல் மற்றும் இணைய வேகம் குறைதல் என்பன ஏற்படுகின்றன.
இதற்கு பிரதான காரணமாக சிக்னஸ் பூஸ்டர்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி சிக்னல்களை அதிகரிக்க இச் சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எனினும் இவற்றினால் ஏனைய வலையமைப்புக்களின் சிக்னலில் ஏற்படும் குறுக்கீடுகள் காரணமாக மேற்கண்ட பாதிப்புக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.