இந்தியாவில் ஒரே மிதக்கும் கிராமம் எங்கு உள்ளது?
இந்தியாவில் மிதக்கும் கிராமம் எங்கு உள்ளது என்பதையும் எவ்வாறு அங்கு சுற்றுலா செல்லலாம் என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கேரளா
பொதுவாக கடவுளின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் மாநிலம் என்றால் அது கேரளா தான். இந்தியாவில் கேரளா மாநிலம் என்பது பசுமையான மாநிலமாகவும், கொள்ளை அழகில் இயற்கையும் காணப்படுகின்றது.
சுற்றலா பயணிகள் அதிகமாக விரும்பும் கேரளாவில் மிதக்கும் கிராமம் குறித்து நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அதுகுறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மிதக்கும் கிராமம்
கேரளா மாநிலம் கொச்சி அருகே 14 சிறிய தீவுகள் உள்ள நிலையில், இதில் ஒன்றாக இருப்பது தான் கடம்குடி ஆகும். இந்த தீவு கிராமம் தண்ணீரில் மூழ்கியது போன்று காணப்படும். ஆதலால் சுற்றுலா செல்ல மிகவும் ஏற்ற இடமாக இருக்கின்றது.
இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டுமெனில், கடம்குடி சாலை மற்றும் நீர் வழியாக செல்ல முடியும். அவ்வாறு கடம்குடி சாலை வழியாக செல்ல வேண்டுமெனில், நீங்கள் தனியாக வாகனம் அமைத்தோ அல்லது பொது போக்குவரத்துடன் செல்லலாம்.

சொந்த வாகனம் மூலம் எவ்வாறு செல்லலாம்?
கொச்சியலிருந்து தேசிய நெடுஞ்சாலை 66 ஐ பிடித்து வடக்கு பரவூர் நோக்கி பயணிக்க வேண்டும். அப்போது வரபுஜா பாலத்தை கடந்த பின்பு, கடமக்குடி செல்லும் பிரதான சாலை வருகின்றது. இங்கு திரும்பும் போது பெயர் பதித்த அடையாள பலகையும் உள்ளது.
அவ்வாறு இல்லையெனில், எடப்பள்ளி அல்லது உயர்நீதிமன்ற சந்திப்பிலிருந்து தொடங்கி கண்டெய்னர் சாலையில் செல்லலாம்.
அதன் பின்பு குறித்த தீவை அடைய மூன்பில்லி பேருந்து நிறுதத்திற்கு அருகிலுள்ள சேவை சாலையில் செல்ல முடியும். மத்திய கொச்சியிலிருந்து, பயணித்தால் 30 முதல் 45 நிமிடங்களே ஆகும்.

பொது போக்குவரத்து மூலம் எவ்வாறு செல்லலாம்?
கடமக்குடிக்கு பொது போக்குவரத்து எனில் நேரடி பேருந்துகள் குறைவாக உள்ளது. விட்டிலா மொபிலிட்டி ஹப் அல்லது எர்ணாகுளத்திலிருந்து நேரடியாக பேருந்து மூலம் செல்லலாம்.
அவ்வாறு இல்லையெனில், வடக்கு பரவூர் அல்லது குருவாயூரில் இருந்து பேருந்தில் சென்று வரப்புழா அருகே இறங்கி, அங்கிருந்து ஆட்டோ மூலமாக செல்ல வேண்டும்.

மெட்ரோவில் சென்றீர்களானால், கொச்சியில் இறங்கி சங்கம்புழா நகரை அடைந்து, பின்பு ஒரு வாகனத்தை முன்பதிவு செய்து குறித்த கிராமத்தை அடையலாம்.
இந்த கடம்குடிக்கு படகு மூலமாகவும் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதாவது எர்ணாகுளம் உயர் நீதிமன்ற ஜெட்டியிலிருந்து பிஜாலா சென்று, அங்கிருந்து கடம்குடிக்கு வேறு சிறிய படகு மூலம் குறித்த கிராமத்தினை அடைந்துவிடலாம்.

வேறு சுற்றுலா தளம்
கேரளாவில் ஆலப்புழா கிராமும் படகு சவாரிக்கு ஏற்ற சுற்றுலா தலமாகும். மேலும் வேம்பநாடு ஏரியில் குமரகம் என்று அழைக்கப்படும் தீவுகளின் குழு காணப்படுகின்றது. இதில் பறவைகளை கண்டுகளிக்கவும், ஆயுர்வேத ஓய்வு விடுதிகளும் காணப்படுகின்றது.
அதே போன்று கேரளாவில் அரிசி கிண்ணம் என்று அழைக்கப்படும் குட்டநாடும் பிரபலமாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |