இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா?
இந்தியாவில் பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் ரயில் துறைக்கு பெரிய பங்கு உள்ளது.
குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம், அதிவேகத்தில் செல்லக் கூடியது என்பதால் சாமானிய மக்கள் கூட ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.
1850களில் பம்பாய் முதல் தானே வரையான பாதையை அன்றைய பிரிட்டிஷ் அரசு போட்டது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான முக்கிய ரயில் சேவையை ஆங்கிலேயர்கள் போட்டிருந்தாலும் சுதந்திரத்திற்குப் பின்னர் அதன் முழு ஆளுமையையும் இந்திய அரசு ஏற்றது.
அன்று முதல் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகள் செலவு செய்து நவீன ரயில் சேவைகளை இந்தியா கொண்டு வந்து கொண்டே இருக்கிறது.
அதிவேக ரயில், வந்தே பாரத் மட்டுமல்லாது புல்லட் ரயில் சேவைகளுக்கான பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாட்டின் ஒரு ரயில் பாதை மட்டும் இன்றும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் கீழ் தான் இருக்கிறது.
அந்த பாதைக்காக இன்றும் இந்திய அரசு பிரிட்டிஷாருக்கு பணம் செலுத்தி வருகிறது.
மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள யவத்மாலுக்கும் மூர்த்திஜாபூருக்கும் இடையில் 190 கிமீ நீளமுள்ள சகுந்தலா ரயில்வே என்ற குறுகிய ரயில் பாதை உள்ளது.
1910இல், கில்லிக்-நிக்சன் என்ற தனியார் பிரிட்டிஷ் நிறுவனம் தான் இந்த சகுந்தலா ரயில்வே பாதையை நிறுவியது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது மத்திய இந்தியா முழுவதும் இயங்கிய கிரேட் இந்தியன் பெனிசுலர் ரயில்வே நிறுவனம் இந்தப் பாதையில் ரயில்களை இயக்கியது.
அதன் பின்னர், 1952இல் ஆங்கிலேயர் கால ரயில்வே தேசியமயமாக்கப்பட்டபோது இந்தப் பாதையை மட்டும் அந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கவில்லை.
19ஆம் நூற்றாண்டில் தண்டவாளங்களை நிறுவிய நிறுவனம் தான் இன்னும் இந்த ரயில் பாதையைப் பராமரித்து வருகிறது.
மேலும் இங்கு ரயில்களை இயக்குவதற்காகப் பிரித்தானியர்களுக்கு இந்தியா இன்னும் ஒரு கோடி ரூபாய் கட்டணத்தைச் செலுத்தி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |