UPI மூலம் பணம் அனுப்புறீங்களா! அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க
UPI என்பது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) உருவாக்கிய உடனடி கட்டண முறை ஆகும்.
மேலும் UPI பணப்பரிவர்த்தனை IMPS உள்கட்டமைப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரின் வங்கிக் கணக்குகளுக்கு இடையில் உடனடியாக பணத்தை மாற்ற அனுமதிக்கிறது.
UPI மூலம் பணம் செலுத்துவதன் மூலம், உங்களது பணபரிவர்த்தனைகள் சீராக செயல்படுகிறதா மற்றும் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Fi Money
1. UPI பின்னை பகிர வேண்டாம்
முதலில் உங்களது UPI பின்னை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். UPI பின்னை யாரிடமும் பகிராமல் இருக்க வேண்டும். மேலும், பிறந்த தேதிகள் மற்றும் வரிசை எண்களில் UPI பின்னை பயன்படுத்தினால் எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் இருக்கும். அதனால், கடினமான எண்களை பயன்படுத்த வேண்டும்.
2.அதிகாரப்பூர்வ UPI மட்டும் பயன்படுத்தவும்
அதிகாரப்பூர்வ UPI பயன்பாடுகளைப் மட்டும் பயன்படுத்த வேண்டும். பதிவுசெய்யப்பட்ட வங்கிகளில் UPI பயன்பாடுகளை நிறுவ வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்டணச் சேவை வழங்குநர்கள் வழங்கும் அதிகாரப்பூர்வ UPI பயன்பாடுகளை மட்டும் நிறுவி பயன்படுத்தவும்.
அதுமட்டுமல்லாமல், ஆப்பை பதிவிறக்கும் முன் அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பது அவசியமான ஒன்று.
Entrackr
3. முகவரியை சரிபார்க்கவும்
நீங்கள் UPI மூலம் பணம் அனுப்பும் போது, பணம் பெறுபவர்களின் UPI ஐடி அல்லது VPA (மெய்நிகர் கட்டண முகவரி) எப்போதும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும். பணம் பெறுபவர்களின் விவரங்களில் சிறிய பிழை இருந்தால் கூட தவறான நபருக்கு பணம் சென்று விடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
4.பணத்தை சரிபார்க்கவும்
நீங்கள் பணப்பரிவர்த்தனையை தொடங்கும் முன் அனுப்ப வேண்டிய தொகையை சரிபார்க்க வேண்டும். நீங்கள் நிர்ணயித்த தொகை தான் இருக்கிறதா, இல்லை அதற்கு மேல் தொகை இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
5.ஃபிஷிங் முயற்சிகளில் கவனம்
உங்களது வங்கியை போல ஆள்மாறாட்டம் செய்து மின்னஞ்சல் மூலமாகவோ, குறுஞ்செய்தி மூலமாகவோ ஏதாவது லிங்க் வந்தால் அதனை க்ளிக் செய்ய வேண்டாம். சந்தேகப்படும்படி அழைப்புகள் வந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோரப்படாத தகவல்தொடர்புக்கு பதிலளிக்கும் வகையில் உங்களது தகவலை வழங்க வேண்டாம்.
India Today
6.நெட்ஒர்க்கை சரிபார்க்கவும்
பணப்பரிவர்த்தனை செய்யும் முன் உங்களது நெட்ஒர்க் இணைப்பை சரிபார்க்க வேண்டும். முழுமையான நெட்ஒர்க் இல்லாவிட்டால், உங்களது பணம் செல்வதற்கு தாமதமாக அல்லது துண்டிக்கப்பட்டுவிடும்.
7.பரிவர்த்தனை பதிவுகள்
உங்களது பரிவர்த்தனை பதிவுகளை அப்படியே வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், பரிவர்த்தனை ஐடிகள், தேதிகள் மற்றும் தொகைகள் உட்பட UPI பரிவர்த்தனை விவரங்களை பராமரிப்பதன் மூலம் பிற்காலத்தில் ஏதாவது முரண்பாடுகள் ஏற்பட்டால் உதவும்.
8.UPI-யை புதுப்பிக்க வேண்டும்
உங்களது UPI பயன்பாட்டை தற்போது இருக்கும் பாதிப்பிற்கு புதுப்பிக்க வேண்டும். அதில், பாதுகாப்பு மற்றும் பிழை திருத்தங்கள் ஆகியவை இருக்கும். இது பாதுகாப்பான கட்டணத்திற்கு அனுமதி செய்கிறது.
India Today
9.வங்கி ஸ்டேட்மெண்ட்டை சரிபார்க்கவும்
உங்களது வங்கி அறிக்கைகள் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை அடையாளம் காணவும் அல்லது பரிவர்த்தனை history-யை தவறாமல் மதிப்பாய்வு செய்யவும் உதவும். இதில், ஏதாவது சந்தேகம்படும்படி இருந்தால் உங்கள் வங்கிக்கு சென்று புகாரளிக்க வேண்டும்.
10. பயோமெட்ரிக்கை பயன்படுத்துங்கள்
உங்களது ஆப்களில் கைரேகை, முக அங்கீகாரம் போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |