தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா?; இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் படுத்தவுடன் தூக்கம் கண்களை தழுவும்
படுத்தவுடன் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் உலகம் முழுவதிலும் ஏராளம்...
ஆக, தூக்கம் வராமல் தவிப்பது சர்வதேச பிரச்சினையாக இருக்க, அதற்கான தீர்வும் பல்வேறு நாடுகளிடமிருந்து வந்த வண்ணம் உள்ளது.
அவ்வகையில், இந்தியாவில் உள்ள அறிவியலாளர்கள் கருஞ்சீரகத்தில் பல நன்மைகள் உள்ளதைக் கண்டறிந்துள்ளார்கள். கருஞ்சீரகம், மன அழுத்தத்தைக் குறைத்து, சீக்கிரம் தூக்கம் வரவும், நீண்ட நேரம் நிம்மதியாக தூங்கவும் உதவுதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதேபோல, தூக்கம் வர உதவும் சில உணவு வகைகள் குறித்துப் பார்க்கலாம்...
பாதாம்: பாதாமில் melatonin என்னும் ஹார்மோனும், தூக்கம் வர உதவும் மக்னீசியம் என்னும் தாதுப்பொருளும் உள்ளன. இந்த Melatonin உடல் கடிகாரத்தை ஒழுங்குபடுத்தி உடலை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது.
வான்கோழி: வான்கோழிக்கறியில் tryptophan என்ற அமினோ அமிலம் பெருமளவில் உள்ளது. அது தூங்குவதற்கு உதவும் melatonin உருவாக உதவுகிறது.
சாக்லேட்: சாக்லேட் ரிலாக்ஸ் ஆக உதவும் endorphin என்னும் ரசாயனம் உருவாக உதவுகிறது. அத்துடன் கொக்கோவிலும் தூக்கத்திற்கு உதவும் tryptophan உள்ளது.
பூசணி விதைகள்: மக்னீசியமும் துத்தநாகமும் நிறைந்த பூசணி விதைகள் தூக்கத்தை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது. அவற்றிலுள்ள உயர் புரதம் இரவு முழுவதும் தூக்கத்திலிருந்து எழும்பாமல் தூங்க உதவுகிறது.
தூக்கத்துக்கு உதவும் அடுத்த உணவின் பெயரைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்...
ஆம், வெள்ளை அரிசி சாதம்: வெள்ளை அரிசி சாதம் முதலான உணவுகள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீக்கிரம் அதிகரிக்கின்றன. தூங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரம் முன்பு அரிசி சாதம் சாப்பிடுவது நன்றாக தூக்கம் வர உதவி செய்யும்.
தேன்: தூங்கச் செல்வதற்கு முன் ஒரு ஸ்பூன் தேன் அருந்திவிட்டு தூங்கச் செல்வது தூக்கம் வர உதவி செய்யும். அதாவது, நம்மை விழிப்புடன் இருக்க உதவும் orexin என்ற ரசாயனத்தின் அளவை இந்த தேனிலுள்ள குளுக்கோஸ் குறைக்கிறது. ஆகவே, தேன் அருந்திவிட்டு படுக்கைக்குச் சென்றால், படுத்தவுடன் தூக்கம் நன்றாக வரும்.
இதுபோக, மேலை நாடுகளில், காலை உணவாக பயன்படுத்தும் Cereal, கிவி பழம், செர்ரி பழச்சாறு, லெட்டூஸ், யோகர்ட் ஆகியவையும் தூக்கம் வருவதற்கு உதவும் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.
எனவே, இந்த உணவு வகைகளில் எதையாவது தூங்கச் செல்லும் முன் உட்கொள்வது, நல்ல தூக்கம் வர உதவும்.