டாக்டர் கன்னத்தில் ஓங்கி பளாரென அறைந்த நர்ஸ்! மருத்துவமனையிலே் மோதல்: வெளியான வீடியோ
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலைத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் டாக்டர், நர்ஸ் ஒருவரை ஒருவர் அசிங்கமாக திட்டிக்கொண்டு சண்டையில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது, நாட்டில் சுகாதார அமைப்பு கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
மருத்துவர்களும், சுகாதார பணியாளர்களும் நோயாளிகளை காப்பாற்ற அயராது உழைக்கிறார்கள்.
இவ்வாறான கடுமையான சூழலில் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்ட மருத்துவமனையில் டாக்டரும் நர்ஸும் சண்டையிட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
டாக்டரும் நர்ஸும் பொலிசார், ஊழியர்கள் முன் ஒருவரை ஒருவரை அசிங்கமாக திட்டிக்கொள்கின்றனர்.
ஒரு கட்டத்தில் டாக்டர் கன்னத்தில் ஓங்கி பளாரென அறைகிறார் நர்ஸ், கோபமடைந்த டாக்டர் பதிலுக்கு நர்ஸை தாக்குகிறார், உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மடக்கி தடுத்துள்ளனர்.
குறித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து நோயாளி ஒருவர் இறந்ததாகவும், அவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் டாக்டருக்கும் நர்ஸுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலில் முடிந்ததாக கூறப்படுகிறது.
#WATCH | A doctor and a nurse entered into a brawl at Rampur District Hospital yesterday.
— ANI UP (@ANINewsUP) April 27, 2021
City Magistrate Ramji Mishra says, "I have spoken to both of them. They say they were under stress and overburdened. We will probe this & speak to both of them."
(Note: Abusive language) pic.twitter.com/XJyoHv4yOh
சண்டையில் ஈடுபட்ட டாக்டர் மற்றும் நர்ஸிடம் தான் பேசியதாகவும், இருவரும் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறியதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி இருவரிடமும் பேசுவதாக நகர மாஜிஸ்திரேட் ராம்ஜி மிஸ்ரா கூறினார்.