தினமும் அரிசி சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுமா? - நிபுணர்கள் கூறும் விளக்கம்
நீரிழிவு நோய் என்பது மிகவும் தீவிரமான நோயாகும், இது உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையின் தொடர்பாடலுடன் அடிக்கடி வருகிறது.
இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை, இருப்பினும், உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையை சரிசெய்வதன் மூலம் அதைக் கட்டுப்படுத்தலாம்.
அரிசியை அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்று பலர் கூறுவதை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். இது எந்தளவிற்கு உண்மை என்பது யாருக்கும் தெரியாது.
அந்தவகையில் அரிசி சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுமா என்று குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தினமும் அரிசி சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுமா?
சர்க்கரை நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து இன்சுலின் குறைபாடு ஏற்படும் நிலை.
உடல் சரியாக இன்சுலினைப் பயன்படுத்தாததே இதற்குக் காரணம். அரிசியில் அதிக அளவு கார்போஹைட்ரேட் இருக்கிறது.
அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாக உட்கொண்டால், நீரிழிவு அளவு அதிகரிக்கும். எனவே, சர்க்கரை நோயாளிகள் தினமும் சாதம் சாப்பிடக் கூடாது.
அரிசி ஒரு சுத்திகரிக்கப்பட்ட தானியமாகக் கருதப்படுகிறது. மேலும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களின் அதிகப்படியான நுகர்வு இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் அபாயமும் ஏற்படும் என மக்களால் நம்பப்படுகிறது.
சாதம் சாப்பிட்டாலும் குறித்த அளவீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி வைத்துக்கொண்டால் உடலுக்கு எந்தவொரு பாதிப்பும் இருக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சாதம் அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள்.
எனவே பழுப்பு அரிசி, கருப்பு அரிசி அல்லது சிவப்பு அரிசி போன்றவற்றை நீங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இது சர்க்கரை நோய்க்கு மட்டுமன்றி பல நோய்களுக்கும் தடையாக இருந்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |