கூந்தல் வளர்ச்சிக்கு அரிசி கழுவிய நீர் உதவுகிறதா? - கட்டாயம் அறியவும்
தற்போதைய காலக்கட்டத்தில் தோல் மற்றும் முடி பராமரிப்பு தொடர்பான பல விடயங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அரிசி தண்ணீரை அழகு சாதனப் பொருளாகப் பயன்படுத்துவது தற்போது வைரலாகி வரும் முறையாகும்.
அத்தகைய சூழ்நிலையில், அரிசி தண்ணீர் உண்மையில் முடி வளர்ச்சிக்கு நன்மை பயக்குமான என்பது குறித்து இந்த பதிவில் ஆராயலாம்.
ஜப்பான், சீனா போன்ற ஆசிய நாடுகளில் தோல் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு அரிசி நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அரிசி நீரில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் பல கனிம கூறுகள் காணப்படுகிறது.
அரிசியில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இது அனைவருக்கும் ஒரே மாதிரியான மாற்றத்தை வழங்குவதில்லை. ஒரு சிலருக்கு நல்லதை வழங்கினால் மற்றவர்களுக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
முடிக்கு அரிசி நீர் வழங்கும் நன்மைகள்?
அரிசி நீரைப் பயன்படுத்துவது முடி மற்றும் உச்சந்தலைக்கும் தீங்கு விளைவிக்கும். உதாரணமாக, முடி மிகவும் வறண்டு இருப்பவர்கள், அரிசி தண்ணீரை உபயோகிப்பது முடியின் வறட்சியை அதிகரிக்கும்.
அரிசி நீரில் இருக்கும் மாவுச்சத்து முடியின் இயற்கையான ஈரப்பதத்தை உறிஞ்சி, முடியை உலரவைத்து உயிரற்றதாக மாற்றுகிறது.
இதனுடன், அரிசி நீர் முடியின் இயற்கையான pH உம் அழித்து, மயிர்க்கால்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது பயன்படுத்துவதால் ஒரு சில தீங்கான விடயங்களும் நிகழ்கிறது. அதற்கு முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம் என இந்த தற்போது பார்க்கலாம்.
01. நீண்ட நேரம் முடியில் அரிசி தண்ணீரை பயன்படுத்த வேண்டாம்.
02. நீண்ட நேரம் அரிசி நீரை உபயோகிப்பதன் மூலம் கூந்தலில் உள்ள ஈரப்பதத்தைப் நீக்கலாம்.
03. உங்கள் உச்சந்தலையில் அரிப்பு அல்லது ஏதேனும் தொற்று இருந்தால், அரிசி தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம்.
04. அரிசி தண்ணீர் தயாரிக்கும் போது, அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் அரிசியை நன்றாகக் கழுவவும்.
05. அரிசி நீரை நீண்ட நேரம் சேமித்து வைக்க வேண்டாம்.
06. அரிசி நீரைப் பயன்படுத்துவதற்கு முன், ஏதாவது ஒவ்வாமை ஏற்படுகிறதா என்று உங்கள் கையில் வைத்து சோதனை செய்து பார்ப்பது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |