அமைதிக்கான நம்பிக்கையே இல்லை! புடினுடன் பேசியப் பிறகு இத்தாலி பிரதமர் பரபரப்பு கருத்து
உக்ரைனில் அமைதி ஏற்படுவதற்கான நம்பிக்கை இல்லை என ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து இத்தாலி பிரதமர் கூறியுள்ளார்.
நேற்று மாலை ரஷ்ய அதிபர் புடினும் இத்தாலியின் பிரதமர் மரியோ டிராகிக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினர்.
புடினுடனான உரையாடலை தொடர்ந்து, உக்ரைனில் அமைதி ஏற்டுவதற்கான நம்பிக்கையே இல்லை என தெரிவித்துள்ளார்.
உணவு ஏற்றுமதிக்கான கருங்கடல் துறைமுகங்களைத் தடுப்பது குறித்து உக்ரைன் அதிபரி ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேச உள்ளதாகவும் அவர் கூறினார்.
எலான் மஸ்க்-கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வீழ்த்தப்படும்: சீனா எச்சரிக்கை!
கடந்த பிப்ரவரி மாத இறுதியிலிருந்து உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, மரியுபோல், கார்கிவ் நகரங்களை தொடர்ந்து அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
மேலும், உக்ரைனின் முக்கிய துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ரஷ்யா, தங்கள் நாடு மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நீக்கனால் மட்டுமே, உணவு ஏற்றுமதிக்காக உக்ரைன் துறைமுகங்களை ரஷ்யா திறக்க அனுமதிக்கும் என தெரிவித்துள்ளது.