பெண் தோழியுடன் அறையில் இருந்த இளைஞர்: துப்பாக்கியால் சுட்ட செல்லப்பிராணி! அமெரிக்காவில் அதிர்ச்சி
அமெரிக்காவில் ஒருவர் தனது பெண் தோழியுடன் இருக்கும் போது அவரது செல்ல நாயால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அசாதாரண துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு அசாதாரண துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதாவது ஒருவர் தனது செல்ல நாயால் சுடப்பட்டதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
அமெரிக்காவில், ஒருவர் தனது பெண் தோழியுடன் படுக்கையில் இருந்தபோது, அவரது செல்ல வளர்ப்பு நாய் 'ஓரியோ' விளையாட வந்துள்ளது.
அவ்வாறு விளையாடும்போது, எதிர்பாராத விதமாக நாயின் கால் துப்பாக்கியின் தூண்டுதலில் சிக்கிக் கொண்டுள்ளது.
இதையடுத்து எதிர்பாராத விதமாக துப்பாக்கி தூண்டப்பட்டு குண்டானது அவரது தொடையில் குண்டு பாய்ந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக, அவருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
வழக்கு பதிவு செய்து விசாரணை
இந்த சம்பவத்தை காவல்துறையினர் விபத்து என பதிவு செய்துள்ளனர். இருப்பினும், அந்த நபர் கூறியது உண்மையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த சம்பவம் முதல் முறை அல்ல. இதற்கு முன், 2021-ல் கன்சாஸ் நகரில் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வேட்டை துப்பாக்கியை மிதித்ததில் 30 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
2018-ல் ஒரு வளர்ப்பு நாய் துப்பாக்கியை மிதித்ததில் அதன் உரிமையாளர் காலில் குண்டு பாய்ந்து விபத்து நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |