தாலிபான்களால் படுகொலையை எதிர்கொள்ளும் நூற்றுக்கணக்கான ஆப்பாவி உயிர்கள்: இரக்கமில்லாத அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா துருப்புகள் மொத்தமாக வெளியேறியுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான ராணுவ மோப்ப நாய்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காபூல் விமான நிலையத்தில் தாலிபான்களின் கருணைக்காக இந்த நாய்கள் காத்துக்கிடக்கின்றன. முதலில் அமெரிக்க ராணுவத்திற்காக இந்த நாய்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றே கருதப்பட்டது.
ஆனால், காபூலில் செயல்பட்டு வந்த ஒரு அமைப்பே மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்த நாய்களை பயன்படுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 130 நாய்கள் தற்போது காபூல் விமான நிலையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ராணுவ விமானங்களில் குறித்த நாய்களை மீட்டுச் செல்ல முடியாத நிலையில், தனியார் விமானங்களும் காபூல் விமான நிலையத்தில் அனுமதிக்கப்படாத நிலையிலேயே, அந்த நாய்கள் விமான நிலையத்திலேயே பாதுகாக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
தற்போது SPCA என்ற சர்வதேச அமைப்பு அந்த நாய்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த 130 நாய்களில் சில ஆப்கன் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாய்களை மீட்கும் நடவடிக்கை நீளும் என்றால் அவைகள் தாலிபான்களின் படுகொலைக்கு இலக்காகலாம் என்றே கூறப்படுகிறது.