டாலர்கள் மற்றும் யூரோக்களுக்கு தடை இல்லை: பேங்க் ஆஃப் ரஷ்யா வெளியிட்ட புதிய தகவல்!
ஐரோப்பிய நாணயமான யூரோ மற்றும் அமெரிக்க டாலர் ஆகியவற்றை ரஷ்யா தடை செய்யாது என பேங்க் ஆஃப் ரஷ்யா கவர்னர் எல்விரா நபியுல்லினா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரினால் உலகநாடுகளுடன் ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள மோதல் போக்கு காரணமாக, மேற்கத்திய நாணயங்களை நம்பியிருப்பதை ரஷ்யா கைவிட்ட நிலையில், மேற்கத்திய நாணயங்கள் ரஷ்யாவில் முழுவதுமாக தடை செய்யபடலாம் என்ற உலக வர்த்தக அமைப்புகளால் எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் வியாழன்கிழமை பேசிய பாங்க் ஆஃப் ரஷ்யாவின் கவர்னர் எல்விரா நபியுல்லினா, உக்ரைன் மோதலுக்கு மத்தியில் மேற்கத்திய நாணயங்களை நம்பியிருப்பதை ரஷ்யா கைவிட்டாலும் ரஷ்யாவில் யூரோ மற்றும் அமெரிக்க டாலருக்கு தடை விதிக்கப்படாது எனத் தெரிவித்துள்ளார்.
Stanislav Krasilnikov/TASS
அத்துடன் குடிமக்கள் தங்களது வெளிநாட்டு நாணயங்கள் முடக்கப்பட்டு இருப்பதை காண மாட்டார்கள் எனவும் உறுதியளித்தார்.
மேலும் தற்போதைய நிலைமைகள் அதிக அளவு நிச்சயமற்ற தன்மையுடன் "சிக்கலானவை" என்று குறிப்பிட்ட நபியுல்லினா, 2022ம் ஆண்டின் இறுதிக்குள் ரஷ்யா 14% முதல் 17% வரையிலான பணவீக்கத்தை சந்திக்கலாம் என்ற வாய்ப்பையும் அவர் மறுக்கவில்லை.
REUTERS
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் சங்கமித்த ஐரோப்பிய தலைவர்கள்: போர் படுகொலைகள் குறித்து நேரில் ஆய்வு
இதனைத் தொடர்ந்து ரஷ்ய அரசாங்கம் அதன் ஏற்றுமதி மூலோபாயத்தை மறுபரிசீலனை செய்யுமாறும், "தள்ளுபடியில்" பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக உள்நாட்டு சந்தைக்கு அதன் உற்பத்தியை மறுசீரமைக்குமாறும் அழைப்பு விடுத்தார்.