இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்... சாதித்துவிட்டதாக மார் தட்டும் டொனால்டு ட்ரம்ப்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான பணயக்கைதிகள் விடுதலை மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார்.
தாம் சாதித்துவிட்டதாக
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப், ஜனவரி 20ம் திகதி பொறுப்புக்கு வரவிருக்கிறார். இந்த நிலையில் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,
மத்திய கிழக்கில் பணயக்கைதிகள் தொடர்பிலான ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். நன்றி! என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஜனாதிபதி ஜோ பைடன் அல்லது வெள்ளைமாளிகையில் இருந்து உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னரே, ட்ரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் பதிவிட்டுள்ளார்.
இன்னொரு பதிவில், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் தாம் சாதித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். நவம்பர் மாதம் சாதனை வெற்றியைப் பதிவு செய்ததன் அடிப்படையிலேயே இந்த ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தமானது பல கட்டமாக முன்னெடுக்கப்படும் என்றே கூறப்படுகிறது. ஜனவரி 19ம் திகதி முகல் அமுலுக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் முதல் 42 நாட்களில் 33 பணயக்கைதிகளை ஹமாஸ் படைகள் விடுவிக்க உள்ளனர்.
மோசமான விளைவுகளை
அதில் அமெரிக்க நாட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பைடன் நிர்வாகம் பல மாதங்களாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை நோக்கிச் செயல்பட்டு வந்துள்ளது, அவர்களே இந்த ஒப்பந்தத்தை சொந்தம் கொண்டாட முடியாது என்றாலும், அவர்களின் முயற்சிகள் சந்தேகத்திற்கு இடமின்றி முன்னேற்றத்திற்கு பங்களித்துள்ளன என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, தாம் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரும் முன்னர் பணயக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்றால், மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என டொனால்டு ட்ரம்ப் வெளிப்படையாக மிரட்டல் விடுத்திருந்ததும் இந்த ஒப்பந்தம் நிறைவேற அழுத்தமளித்துள்ளது.
ஒப்பந்தம் செயலுக்கு வரும் நிலையில், பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் கலவையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளனர். காஸாவில், ஏராளமான மக்கள் இந்தச் செய்தியைக் கொண்டாடுகிறார்கள், மக்கள் ஆரவாரம் செய்து கார் ஹாரன்களை அடித்து மகிழ்ச்சியை வெளிபப்டுத்தியுள்ளனர்.
ஆனால், சில இஸ்ரேலியர்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர், அனைத்து பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்பும் வரை இந்த ஒப்பந்தத்தை நம்ப மாட்டோம் என்றும் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |