நோய்களால் அவதிப்படுகிறாரா டொனால்ட் டிரம்ப்? வதந்திகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடல் நிலை குறித்த வதந்திகள் சமூக ஊடகங்களில் மிகப்பெரிய பேசு பொருளாக உருவான நிலையில் அதற்கு டிரம்ப் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
டிரம்ப் உடல் நிலை வதந்திகளும், முற்றுப்புள்ளியும்
சமூக ஊடகங்களில் கடந்த சில வாரங்களாக டிரம்பின் உடல் நிலை குறித்த வதந்திகள் அதிகமாக பரவி வருகின்றன, குறிப்பாக அவரின் மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு(ischemic stroke) நாள்பட்ட சிரை பற்றாக்குறை(Chronic Venous Insufficiency) கைகளில் காயம் மற்றும் சமீபத்தில் அவர் இறந்து விட்டதாக கூட பலவித வதந்திகள் பரவின.
இந்நிலையில் வதந்திகளுக்கு டிரம்ப் நேரடியாகவே முற்றுப்புள்ளி வைத்துள்ளார், இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக ஊடக பக்கமான ட்ரூத் சோஷியலில் பதிலளித்துள்ளார். அதில் பெரிய எழுத்துகளில் “என் வாழ்க்கையில் இதுபோல் எப்போதும் சிறப்பாக உணர்ந்தது இல்லை” என குறிப்பிட்டு வதந்திகளை மறுத்துள்ளார்.
அத்துடன் தான் இறந்துவிட்டதாக X தளத்தில் பரப்பப்பட்ட “Trump is Dead” என்ற ஹேஷ்டேக்கிற்கு பதிலளிக்கும் விதமாக, டிரம்ப் தன்னுடைய பேரக்குழந்தைகளுடன் கோல்ஃப் விளையாடும் புகைப்படத்தை டிரம்ப் பகிர்ந்துள்ளார்.
மேலும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஐந்தரை மணி நேரம் டிரம்ப் தனது பேரக்குழந்தைகளுடன் கோல்ஃப் விளையாடியதாக வெள்ளை மாளிகை பதிவிட்டுள்ளது.
டிரம்பிற்கு இருப்பதாக கூறப்படும் நோய் பாதிப்புகள்
நாள்பட்ட சிரை பற்றாக்குறை: டிரம்பின் கால்களில் கடந்த ஜூலை மாதம் வீக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து பல ஊகங்கள் பரவின.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வழங்கிய தகவலில், டிரம்பிற்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை(CVI) இருப்பதாக உறுதிப்படுத்தியது.
CVI என்பது கால்களில் உள்ள இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு மூளைக்கு இரத்தத்தை திருப்பி அனுப்ப முடியாத நிலை ஆகும், இதனால் கால்களில் ரத்தம் தேங்கி ரத்த அழுத்தம் அதிகரிப்பதாகும்.
இது 70 வயதுக்கு மேற்பட்டவர்களின் இயல்பான மருத்துவ நிலை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
டிரம்பின் கைகளில் காணப்படும் காயங்கள்: சமீபத்தில் டிரம்பின் கைகளில் காணப்படும் காயங்கள் இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.
இதற்கு பதிலளித்த வெள்ளை மாளிகை, டிரம்ப் தினமும் அளவுக்கு அதிகமாக வேலை செய்வதால் ஏற்படும் காயங்கள் என விளக்கமளித்துள்ளது.
மேலும் டிரம்ப் இதய ஆரோக்கியத்திற்காக ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதால் அதனால் ஏற்படும் பக்க விளைவாக கூட காயங்கள் இருக்கலாம் என அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு(ischemic stroke): டிரம்பிற்கு மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு(ischemic stroke) இருப்பதை வெள்ளை மாளிகை மூடி மறைப்பதாக பல்வேறு ஆதாரங்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இது தொடர்பாக எந்தவொரு விளக்கத்தையும் டிரம்ப் மற்றும் வெள்ளை மாளிகை வழங்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |