குழந்தைகள் உயிரை பறித்த டெக்ஸாஸ் துப்பாக்கிச்சூடு! டொனால்டு ட்ரம்ப் சொன்ன ஒரு தீர்வு
துப்பாக்கியுடன் இருக்கும் தீய மனிதனை நிறுத்த ஒரே வழி, ஒரு நல்ல மனிதனின் கையில் துப்பாக்கியை கொடுப்பதுதான் என டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள பள்ளியில் கடந்த மே 25-ஆம் திகதி துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாகி கலாச்சாரத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்தக்கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
பிரபல பாடகர் சுட்டுக்கொலை! நான் தான் கொன்றேன் என கூறிய கனடாவை சேர்ந்த தாதா
இந்நிலையில் இது போன்ற துப்பாக்கிசூடு சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீர்வு கூறியுள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் பேசுகையில், டெக்சாஸ் துப்பாக்கிசூட்டில் பலியானவர்களுக்கு தங்களைத் தற்காத்துக் கொள்ள எந்த வழியும் இல்லை. துப்பாக்கியுடன் இருக்கும் தீய மனிதனை நிறுத்த ஒரே வழி, ஒரு நல்ல மனிதனின் கையில் துப்பாக்கியை கொடுப்பதுதான்.
அதேபோல் ஒரு பள்ளிக்கு ஒரே நுழைவுப் பாதை மட்டுமே இருக்கும்படி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் வலுவான தடுப்பு அமைப்பு மற்றும் உலோகங்களை கண்டறியும் கருவிகள் போன்றவையும் அமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.