நான் தினமும் 325 mg ஆஸ்பிரின் எடுத்துக் கொள்கிறேன்! உடல்நிலை குறித்து டிரம்ப் பேட்டி
எனது உடல்நிலை சீராக இருக்க வேண்டும் என்பதற்காக நான் தினமும் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விளக்கியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் உடல் நிலை குறித்த வதந்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்த வதந்திகள் அவ்வப்போது வெளிவந்து சர்ச்சைகளை ஏற்படுத்தும்.
டிரம்புக்கு வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது, அதை மறைக்க டிரம்ப் மேக்கப் போட்டு கொள்கிறார், அவரது கால்களில் வீக்கம் உள்ளது என்பது போன்ற பல தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பரபரப்புகளுக்கு டிரம்ப் முற்றுப்புள்ளி
இந்நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்து பரவும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக “தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைக்கு” டொனால்ட் டிரம்ப் சிறப்பு பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார்.
அதில், தன்னுடைய உடல்நிலை சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தினமும் 325 mg ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தன்னுடைய இதயத்திற்கு மெல்லிய இரத்தமே தேவை, ஆஸ்பிரின் மருந்தை நான் எடுத்துக் கொள்ளாவிட்டால் என்னுடைய இரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்கும் என்பதால் அதனை தொடர்ந்து எடுத்து வருகிறேன்.
நான் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதால் அவ்வப்போது உடலில் சிராய்ப்புகள் ஏற்படுவது போல் தோன்றும், அந்த சிராய்ப்புகளை மறைக்கவே நான் மேக்கப் போட்டு கொள்வதாகவும், அது 10 நொடிகளில் முடிய கூடியது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எனக்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றில் ஆர்வம் இல்லை, நான் செய்யும் ஒரே ஒரு உடற்பயிற்சி கோல்ஃப் விளையாடுவது மட்டும் தான்.

நான் கடந்த வாரம் ஒரு ஸ்கேன் எடுத்தேன், அது மற்றவர்கள் கூறுவது போல எம்ஆர்ஐ ஸ்கேன் அல்ல, அது சாதாரண சிடி ஸ்கேன் தான்.
மேலும் நான் நீளமான நிகழ்ச்சிகளில் தூங்கி விடுவதாக கூறுகிறார், ஆனால் அது அப்படி இல்லை நான் கண் சிமிட்டும் போது அதனை புகைப்படம் எடுத்து பதிவேற்றி அவ்வாறு கூறுகிறார்கள், சொல்லப்போனால் நான் இரவில் கூட மிகவும் குறைவான நேரம் தான் தூங்குகிறேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |